Wednesday, August 12, 2020

உடலும் குணச்சித்திரமும்



அன்புள்ள ஜெ

வெண்முரசின் கதாபாத்திரங்கள் உடலமைப்பாலேயே வெளிப்படுவதைப்பற்றிய என்னுடைய மனப்பதிவும் இதுதான். வியாசரே அப்படித்தான் நினைத்திருக்கிரார். அதனால்தான் கர்ணன் உயரமனாவனாக காட்டப்பட்டிருக்கிறான்.

நீங்கள் அப்படி உடல்வழியாக நிகழ்த்தியவற்றில் எனக்கு மிகமிக அதிர்ச்சியாக இருந்தது தமயந்தியின் கதை. தமயந்தி உடல்வழியாகவே பயணம் செய்கிறாள். முதுமையடைந்து கிழவியாகி சாவுவரை போய் திரும்புகிறாள். மூலக்கதையில் நளனுக்கு அப்படி ஒரு உடல்வழி பயணம் இருக்கிறது. நீங்கள் அதை தமயந்திக்கும் விரித்துக்கொண்டீர்கள்.

அப்போது ரியலிஸ்டிக்கான பார்வையில் அது கொஞ்சம் மிகை என்று தோன்றியது. அது ஒரு சாபம். மூளையிலிருந்து அன்றாடத்தை கழற்றிவிடவே முடியவில்லை. ஆனால் இன்றைக்கு இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு தயமந்தியின் அந்த உடலின் வழியாக நிகழ்ந்த பயணம் ஒரு பெரிய குறியீடாக நினைவில் நிற்கிறது. நானறிந்த பலர் உடல்வழியாக அடைந்த மாறுதல்களெல்லாம் நினைவுக்கு வருகின்ரன. என் தோழர் ஒருவர் பிஸினஸில் பெரிய நஷ்டம் அடைந்தார். அவர் மனைவில் அப்படியே உருகி உருவழிந்தார். பிறகு அவர் மீண்டு வந்தபோது அந்த அம்மையார் பத்தாண்டுகள் வயது குரைந்தவரானார். இதையெல்லாம் ஒரு டிரமாட்டிக் ரியலிசமாக காட்டியது தமயந்தியின் வாழ்க்கை.

செல்வக்குமார்