Thursday, August 20, 2020

காத்திருப்பவை

 

அன்புள்ள ஜெ

மழைப்பாடலை படித்துக்கொண்டிருந்தேன். அது போருக்காக முதிர்ந்து காத்திருக்கும் கைவிடுபடைகளில் தொடங்குகிறது. போரில் நாவல் முடிகிறது 25000 பக்கம். இத்தனைதூரம் இந்நாவல் வந்ததற்கு நடுவில் அந்த அம்புகள் காத்துக்கொண்டே இருந்திருக்கின்றன. அவை எவருக்காக காத்திருக்கின்றன என்று தெரியவில்லை.

ஆச்சரியமான ஒரு விஷயம் இது. நான் இன்னும் அடுத்த நாவல்களை வாசிக்கவில்லை. அந்த கைவிடுபடைகளை முறுக்கியவர்கள், அதற்கு ஆணையிட்டவர்கள் எல்லாம் செத்துப்போய்விடுவார்கள். தலைமுறை தலைமுறையாக அந்த விசையும் கோபமும் மட்டும் அப்படியே  காத்திருக்கும்.

ஒரு கண்ணிவெடியை அமைப்பவன் நூறு ஆண்டுகளுக்குப்பின் பிறக்கப்போகும் குழந்தை ஒன்றை கொல்லக்கூடும் என்று ஒரு அமெரிக்க நாவலில் வாசித்ததுண்டு. அதை நினைத்துக்கொண்டேன்

ராஜ்குமார் அரவிந்த்