Wednesday, August 26, 2020

வணிகர்களின் வழி

 

ஜெ

இன்று களிற்றியானைநிரை வாசித்துக்கொண்டிருந்தேன். வணிகர்கள் அஸ்தினபுரி மீள்வதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். 

நாங்கள் கண்முன் பொருண்மையானவற்றை மட்டுமே கணிக்கிறோம். பொருளும் அவற்றை வாங்கும் பணமும் பொருண்மையானவை. எங்கள் தெய்வங்கள் கண்ணெதிரே வாழ்பவை. அவை மாற்றில்லாதவை அல்ல. நாங்கள் போருக்குப் பின் மெல்ல வெளியே இறங்கிப் பார்க்கிறோம். மழை நின்றுவிட்டதா என்று கைநீட்டி அறிகிறோம். மெல்ல காலடி வைக்கிறோம். சிறிய அளவில் தொடங்குகிறோம். செய்துநோக்கி விளைவுகளை உய்த்தறிந்து விரிவாக்கிக் கொள்கிறோம்.”

இந்தப்பகுதி மிகமுக்கியமனாது என்று பட்டது. ஏனென்றால் வெண்முரசு முழுக்க அந்தணர்களும் அரசகுடியினரும் சூதர்களும் நிமித்திகர்களும் கற்பனையும் ஊகங்களும் செய்துகொண்டே இருக்கிறார்கள். என்ன நடக்கும் என்ன வரும் என்றெல்லாம் கணிப்பை செய்துகொண்டே இருக்கிறார்கள். அதற்கான ஏராளலமான கொள்கைகளும் அவர்களிடம் உள்ளன. அந்தக்கணிப்புகளின் கூர்மையைக்கொண்டே அவர்கள் ஜெயிக்கிறார்கள். அப்ஸ்ட்ராக்‌ஷன் நடந்துகொண்டே இருக்கிறது

ஆனால் வெண்முரசில் வரும் வணிகர்கள் மிகமிக யதார்த்தமாக இருக்கிறார்கள். அவர்கள் எதையும் கணிப்பதில்லை. தூலமாக கண்முன் இருப்பதை மட்டுமே அவர்கள் பார்க்கிறார்கள். கான்கிரீட் மட்டுமே உண்மை என நினைக்கிறார்கள். எது மெய்யோ அதுபோதுமென நினைக்கிறார்கள். அது மிகமுக்கியமான வழிமுறை. செய்துபார்த்தே அறிகிறார்கள். அவர்கள் வேறு உலகில் வாழ்கிறார்கள்.

கிருஷ்ணன்