Thursday, August 20, 2020

முடிவு

 

அன்புள்ள ஜெ

அம்பிகை அம்பாலிகை இருவருக்கும் இடையேயான பூசலில் இருணந்து மொத்த மகாபாரதமும் எப்படித் தொடங்கியது என்று ஒரு வாசகர் எழுதியிருந்தார்.அதை நானும் நினைத்தேன். நான் ஒரு பெரிய ஒற்றுமையை கண்டேன். அம்பிகை அம்பாலிகை இருவரும் பாண்டுவின் சாவின்முன் பகைமறந்து தழுவிக்கொண்டு காட்டுக்குள் சென்று தீயில் சிக்கி உயிரிழக்கிறார்கள். அவர்கள் தொடங்கிவைத்த பகைமை வளர்ந்து குருக்ஷேத்திரப்போராக ஆகிறது. ஆனால் கடைசியில் அதை உருவாக்கிய காந்தரியும் குந்தியும் அதேபோல கைகோத்துக்கொண்டு சென்று தீயில் மறைகிறார்கள். ஒரேகதை திரும்பத்திரும்ப நிகழ்கிறது. இந்த இரண்டாவது கதை மூலமகாபாரதத்தில் உள்ளது. அந்த முதல்கதையை நீங்கள் கொஞ்சம் நீட்டியிருக்கிறீர்கள். இந்நாவல் இங்கே முடியும் என்று நினைத்து தொடக்கத்திலேயே அதை அவ்வாறு எழுதியிருக்கிறீர்கள் என்று தோன்றியது. விதி திரும்பத்திரும்ப நிகழ்கிறதென்பதை இதைவிடச் சொல்லிவிடமுடியாது

சபரிகிரிநாதன் எம்