Monday, August 24, 2020

உச்சங்கள்

 

அன்புள்ள ஜெ

வெண்முரசு நாவல்களில் மெய்யுணர்வை ஒவ்வொரு கதாபாத்திரமும் அடையும் உச்சங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அதைப்பற்றி எழுதப்பட்டிருந்த கடிதத்தை வாசித்தேன். மெய்யுணர்வு வருகிறது, ஆனால் நீடிப்பதில்லை. அதாவது ஒரு மெய்யுணர்வை அடைந்ததுமே அதிலேயே நீடிப்பதில்லை. அதிலிருந்து லௌகீகத்துக்கு வந்துவிடுகிறார்கள். கந்தமாதன மலைக்குப்போன யுதிடிஷ்டிரர் கீழே வந்துவிடுகிறார்.

ஆனால் சின்னச்சின்ன கதாபாத்திரங்கள் ஒரு மெய்யறிதலை அடைந்ததுமே அதிலேயே உச்சமடைந்துவிடுகிறார்கள். இவர்களுக்கிடையே என்ன வேறுபாடு என்று பார்த்தேன். சின்னக்கதாபாத்திரங்களின் லௌகீகம் ரொம்பச் சின்னது. அவர்கள் விட்டுவிட்டு போய்விடமுடிகிறது. யுதிஷ்டிரனுக்கோ அர்ஜுனனுக்கோ லௌகீகம் மிகமிகப்பெரியது. அதை கடப்பது எளிதாக இல்லை

சத்யமூர்த்தி