Sunday, August 16, 2020

மழைப்பாடலின் கதை

 


 அன்புள்ள ஜெ

வெண்முரசு நாவல்களை தொடர்ச்சியாக வாசித்து வருகிறேன். நாவல் தொடர் முடிந்தபின்னர்தான் நான் வாசிக்கவே ஆரம்பித்தேன். மழைப்பாடல் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் இரண்டு வாரத்தில் இரண்டாயிரம் பக்கம் நெருங்கிவிட்டேன்

வெண்முரசின் சுவாரசியமான அம்சம் என்னவென்றால் இதில் உள்ளவிஷயங்கள் நமக்கு கொஞ்சம் தெரிந்தவை. ஆகவே மேலும் தெரிந்துகொள்ள ஆர்வம் அளிக்கின்றன. மகாபாரதத்தின் விரிந்த ஜியோபொலிடிக்கல் பகுதி நமக்குத்தெரியாது. அது யாதவர்களுக்கும் காந்தாரத்துக்குமான போர் என்ற கோணத்திலே யோசித்ததே இல்லை. அந்த கோணம் மகாபாரதத்தின் அடிப்படையையே மாற்றிவிட்டது

இரண்டு வேறுபட்ட பண்பாடுகள். மழை ஓர்இடத்தில். காற்று இன்னொரு இடத்தில். இந்திரன் இங்கே மாருதர்கள் அங்கே. காந்தார நிலத்தின் வர்ணனையும் ஓநாய் வழியாக அங்குள்ள பசியை விவரித்திருக்கும் விதமும் கனவுபோல விரிகின்றன

ஜெய்கணேஷ்