Sunday, August 23, 2020

மந்தனின் மறுவருகை.


 

அன்பின் ஜெ,


வணக்கம்!.

செந்நாவேங்கை செம்பதிப்பிலிருந்து சில பகுதிகளை அலுவலக பணியின் இடைவேளைகளில் மீள்வாசிப்பு செய்துகொண்டிருக்கிறேன். புத்தகத்தை வாசல் திண்ணையில் வைத்துவிட்டு, வீட்டின் உள்ளே சென்று திரும்பும் இடைவேளையில், புத்தகத்துக்கு மிக அருகில் மந்தன் ஒன்று வந்து உட்கார்ந்திருந்தது. நல்லவேளையாக புத்தகத்தை ஒரு சுற்று சுற்றிவிட்டு ஓடிவிட்டது.

முன்பு மாமலர் வாசித்துக்கொண்டிருக்கையில்,மந்தன் வந்துசென்ற நாள் தொடங்கி, "முதற்கனல்" முதல் "மாமலர்" வரையிலான வெண்முரசு நாவல்களை வாசித்தபின் உங்களுக்கு  எழுதிய கடிதம் வரை எல்லாவற்றையும் ஒரு வினாடியில் நினைக்கவைத்துவிட்டது இந்த மந்தனின் விஜயம்.

https://venmurasudiscussions.blogspot.com/2017/06/blog-post_14.html

வெண்முரசு வாசிப்பனுபவம் குறித்து உங்களுக்கு முதன்முதலாக எழுதிய கடிதத்தை திரும்ப படிக்கையில் பல்வேறு தருணங்கள் அலையடித்தபடி இருக்கின்றன. வெண்முரசு, என்றென்றும் எங்கள் வாழ்க்கையோடு பிணைக்கப்பட்ட படைப்பாக ஆகிவிட்டது.


//
வெண்முரசு - விதைகளாகவும்,விளைச்சளாகவும் பல்கிப்பெருகி பரவசமடையச்செய்யும் நாற்றங்கால். ”பிறிதொன்றென ஆகாமல் எவரும் பிறிதெதையும் அடையவியலாது” விதர்ப்பத்தின்  சௌபர்ணிகை கரையில் தமனர் பாண்டவர்களுக்கு அளிக்கும் நற்ச்சொல்போல பிறிதொன்றாக ஆகாமல் வெறும் வாசிப்பிலும், கதை கேட்டலிலும் அதனை அடைதல் இயலாது.
//

கடிதத்தின் கடைசிவரிகள்.

அந்த நாற்றங்கால் மூலம் விளைந்த நெல்மணிகளில் ஆகச்சிறந்தவை இப்பொழுது விதைநெல்லென பெருகியுள்ளது.

நட்புடன்,
யோகேஸ்வரன் ராமநாத