Tuesday, August 25, 2020

அமெரிக்கா

 

அன்புள்ள ஜெ

அஸ்தினபுரி போருக்குப்பின் மீண்டு எழுவதைப் பற்றிய ஒரு சித்திரம் களிற்றியானைநிரை நாவலில் வருகிறது. இதைப்பற்றி அப்போது ஒரு கடிதம் எழுதியிருந்தேன்

சமீபத்தில் அமெரிக்காவின் வெற்றி என்ற தலைப்பில் என் மகளுக்கு இங்கே ஒருபாடம் நடந்தது. அதில் ஏன் அமெரிக்கா வெல்கிறது என்ற கேள்விக்குச் சொல்லப்பட்ட காரணம் இது. வெல்லவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் வந்து சேர்ந்த இடம் இது. அவர்கள் வெற்றிக்காக அத்தனை தொலைவு வந்தார்கள். வெற்றிக்கான தகுதி கொண்டவர்கள். அதற்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டு கிளம்புபவர்கள். அமெரிக்கா ரிஸ்க் எடுப்பவர்களின், பயணம் செய்பவர்களின், புதுமையை நாடுபவர்களின் மண்

அஸ்தினபுரி மீண்டும் எழுந்தந்தைப்பற்றிச் சொல்லும்போது இப்படி வருகிறது இங்கு வருபவர் ஒவ்வொருவரும் இத்தொலைவு நடந்து கடக்கும் ஆற்றலுடையவர்கள். அத்தொலைவுக்கு அப்பாலிருக்கும் ஒன்றை கனவு காணும் உளமுடையவர்கள். எல்லை கடப்பவர்கள், புதுமை நாடுபவர்கள். அழகான வரி. அஸ்தினபுரி ஒரு அமெரிக்காவாக இருந்தது என நினைத்துக்கொண்டேன்

 

ஸ்ரீனிவாசன்