Friday, August 14, 2020

ஆஸ்திகனும் அஸ்தினபுரியும்



 குரு நித்ய சைதன்ய யதி ஓவியங்கள் சார்ந்த தனது உரையாடல் ஒன்றினில் ஓவியம் சார்ந்த அடிப்படை கூரான கோடுகள் குறித்து அறிமுகம் செய்கையில் வினவுகிறார்.


முப்பரிமாண புறத்தை இரு பரிமாணத்தில் மறு உருவாக்கம் செய்யும் ஓவியக்கலையில், முப்பரிமாணத்தை இரு பரிமாணம் கொள்ள வைப்பதில் கோடுகளின் பங்கு என்ன? 

உண்மையில் முப்பரிமாண புற உலகில் கோடுகள் என்ற ஒன்றே கிடையாது. விளிம்புகள் மட்டுமே உண்டு. இந்த விளிம்புகளை மறுஉருவாக்கம் செய்வதே கோடுகள்.

ரியாலிசம், இம்ப்ரஸநிஷம், கியூபிசம் என ஒவ்வொரு அழிகியல் முறையிலும் இந்த அடிப்படை கோடுகள் என்னவாக இருக்கிறது என்பதை கவனிப்பதே இந்த அழகியல் முறைகளின் கொள்கைகளை அறிய முதல் படி.

குரு நித்யாவின் இந்த சொல்லை பின்தொடர்ந்து மேற்கண்ட ஓவியத்தை ரசிக்கப் புகுவோம் எனில், இந்த ஓவியத்தின் பரிமாணத்தை இன்னும் அணுகி அறிய இயலும்.  

கடலூர் சீனு