Saturday, August 15, 2020

மழை

 

அன்புள்ள ஜெ 

வெண்முரசின் முதற்கனலை தாண்டிவிட்டேன். அடுத்த நாவலான மழைப்பாடலை தொடங்கவிருக்கிறேன். அதன் தொடக்கமே அபாரமானது. பாலையின் வரட்சியும் மழையும். கூர்ஜரத்தில் பெய்யும் மழையின் குளுமையை உணர முடிந்தது. நாவல் முழுக்க இந்த வரட்சியும் மழையும் இரண்டு சரடுகளாகப் பின்னிச் செல்லும் என நினைக்கிறேன். 

அந்த இனிய மழையை பீஷ்மர் வரவிருக்கும் ரத்தமழையாகவே பார்க்கிறார் அஸ்தினபுரிக்கு மேற்கு வானில் ஒரு எரிவிண்மீன் செந்நிறக் குங்குமத்தீற்றல்போல விழுந்தது என்றும், அது துவாபரன் என்னும் வானகப்பகடை என்றும் நிமித்திகர் சொன்னார்கள். கணிகர் பன்னிரு ராசிசக்கரத்தில் அனைத்து தேவர்களும் இடம்பெயர்ந்து ஒருவரோடொருவர் சினப்பதாகச் சொன்னார்கள்.

சூதர்கள் ஒரு பெருமழையைப்பற்றிப் பாடினார்கள். மேற்கே இடி இடிக்கிறது. மின்னல்கள் வெட்டுகின்றன. மழை நெருங்கி வருகிறது என்றனர். ஆனால் அது உதிர மழை. கொழுத்த குருதி வானிலிருந்து செவ்விழுதுகளாக இறங்கும். கூரைவிளிம்புகளில் இருந்து செஞ்சரடுகளாக பொழியும். செந்நிறப்பட்டாடைகள் போல செங்குருதி அஸ்தினபுரியின் தெருக்களில் வழியும். கங்கையும் யமுனையும் செவ்வலைகள் எழுந்து கரைமுட்டி ஒழுகும் என்கிறார்கள். 

என்று நிமித்திகர் சொல்கிறார்கள். அவர் ஒரு முன்னெச்சரிக்கையை அடைந்துவிட்டார். முதற்கனலை அப்படியே விட்டுவிட்டாலும்கூட ஒரு மாபெரும் நாவலுக்கான மகத்தான தொடக்கம்\

 

டி. எஸ்.ராஜேஷ்