Wednesday, August 26, 2020

நீலம்

 

அன்புள்ள ஜெ

நீலம் வாசித்துக்கொண்டிருக்கிறேன். அந்த மொழி மயக்குகிறது. இப்போதுதான் நீலத்தை வந்தடைந்தேன். இந்தமொழிக்கு பெரியாழ்வார் பாசுரத்துடன் ஒரு இசையொருமை உண்டு. இது ஆச்சரியம்தான். அந்த செய்யுளில் இருந்து இந்த உரைநடை வந்திருக்கிறது. சமகாலத்தில் இப்படி ஒரு மறுவடிவம் செறிவாகவும் அழகாகவும் நிகழ்ந்திருக்கிறது. நீலம் ஒரு பெரிய பக்திநிலையில் இருந்தாலும் அதற்கு ஒரு தாந்த்ரிக அமைப்பு உள்ளது. அதன் கட்டமைப்பில் இரண்டு சரடுகள் பின்னிச்செல்கின்றன. அது ஒன்று ஜீவாத்மாவான கோபிகையின் பார்வையில் கிருஷ்ணன். இன்னொன்று உக்ரரூபியான கிருஷ்ணனின் பார்வையில் உலகம். இரண்டுமே ஒன்றையொன்று நிரப்பிக்கொண்டு செல்கின்றன. விரிவாக பேசவேண்டிய ஒரு அமைப்பு இது

கே.எஸ்.ராஜகோபாலன்