Tuesday, August 25, 2020

மூவர்

 

அன்புள்ள ஜெ

நான் வெண்முரசின் மழைப்பாடலை படித்துக்கொண்டிருக்கிறேன். இந்நாவலில் எனக்கு சுவாரசியமாகப் பட்ட கதாபாத்திரங்கள் அம்பா அம்பிகா அம்பாலிகாதான். மூவருமே தேவியின் வடிவங்கள். மூவருமே அம்மைகள். ஆனால் மூன்றுபேரிலுமே ஒரு தீமையின் அம்சம் உள்ளது. அம்பை ஒரு ஆங்காரமான துர்க்கை. அம்பிகை லட்சுமி. அம்பாலிகை சரஸ்வதி. ஆனால் அவர்களின் அந்த இயல்பே அவர்களை கொடியவர்களாக ஆக்குகிறது. மூன்றுவகைகளில் அவர்கள் அஸ்தினபுரியின்மேல் எய்யப்பட்ட அம்புகள் போல. அவர்களின் குணாதிசயங்களிலுள்ள நுட்பமான மாறுபாடும் அதேசமயம் சகோதரிகள் என்பதனால் அவர்களின் குணாதிசயத்திலுள்ள ஒற்றுமையும் இந்த நாவலில் அழகாகக் காட்டப்பட்டுள்ளது

 

கிருஷ்ணமூர்த்தி கணேஷ்