Saturday, August 15, 2020

கனல்

 

அன்புள்ள ஜெ 

மீண்டும் முதற்கனலை வாசிக்கும்போது பல வரிகள் அதிர்ச்சியை அளிக்கின்றன. முக்கியமாக அணையாச்சிதை என்ற வார்த்தை. அம்பை ஏறி அமர்ந்த அந்தச் சிதை அணையாச்சிதை. அவள் எரிந்துகொண்டே இருந்தாள். பல தலைமுறைக்காலம். முழுதாக அவள் எரிந்தது கடைசியாக குருக்ஷேத்திரத்தில்தான். நான் குருக்ஷேத்திரத்தை வாசிக்கையில் ஏன் அந்த மாபெரும் தீயை வர்ணிக்கிறீர்கள், மூலத்தில் அதெல்லாம் இல்லையே என நினைத்தேன். மீண்டும் முதற்கனல் வாசிக்கும்போதுதான் அந்த முதற்கனலில் இருந்துதான் அத்தனை அழிவும் தொடங்கியது என்றும் குருக்ஷேத்திரத்தில் எரிந்தது கடைசிக்கனல் என்றும் துலங்கியது 

குமார் மூர்த்தி