Tuesday, August 25, 2020

ஊழ்

 

அன்புள்ள ஜெ

திசைதேர் வெள்ளம் படித்துக்கொண்டிருக்கிறேன். குருக்ஷேத்திரப் பெரும்போரின் மலைக்கவைக்கும் சித்திரம். ஒவ்வொருநாளும் அனலாலும் ரத்தத்தாலும் மெழுகப்படும் நிலம் அது.



மகாபாரதம் முழுக்க ஊழ் பற்றிய நம்பிக்கை வந்தபடியே இருக்கிறது. அதை ஏதாவது ஒரு கதாபாத்திரம் சொல்லிக்கொண்டே இருக்கிறது. சிலசமயம் மகாபாரதப்போர் போர்க்களத்துக்கும் மனிதர்களுக்குமான போராக தெரிகிறது. சிலசமயம் தெய்வங்களுக்கும் மனிதர்களுக்குமான போராக சிலசமயம் அது ஆயுதங்களுக்கும் மனிதர்களுக்குமான போராக

அம்பு ஆலையில் நெருப்பில் உருகி, அனலென்றாகி கூடத்தால் அறையுண்டு உருப்பெறும்போதே அது எவரைக் கொல்லும் என்பது முடிவாகிவிடுகிறது. அம்புக்கும் அதன் பலிக்குமிடையேயான ஆடலே போர்

என்று ஒரு கதாபாத்திரம் சொல்கிறது. அம்பு பிழைத்தால் அது மீண்டும் வரும். அவை அழியா வஞ்சத்துடன் மீண்டும் களம் நுழையும். இலக்கை தேடிவரும் என்கிறது. உண்மையில் களத்தில் விழுந்த அனைத்துப் படைக்கலங்களும் பொறுக்கிச் சேர்க்கப்பட்டு மீண்டும் உருக்கி அடித்து கூராக்கி திரும்ப கொண்டுவரப்ப்படும் சித்திரம் ஒரு குரூரமான கவிதை போலவே இருந்தது

ஜே..மகேந்திரன்.