Saturday, August 22, 2020

பயிற்சிவகுப்புகள்

 

அன்புள்ள ஜெமோ

மழைப்பாடல் படித்துக்கொண்டிருக்கிறேன். இந்த மொத்த நாவல்தொடருக்கும் நீங்கள் ஒரு கைட் போல ஒரு சில பக்கங்கள் எழுதலாம். அல்லது பயிற்சிவகுப்புகள் கூட வைக்கலாம். ஏனென்றால் இன்றைக்கு பலருக்கு உள்ளே சென்று வாசிப்பதில் ஒருசின்ன பயமோ தயக்கமோ இருக்கிறது. நம்மால் முடிக்கமுடியுமா, வாசிக்கமுடியுமா என்று. சூம் மீட்டிங்கில் வெண்முரசு வாசிக்க விரும்புபவர்கள் மட்டும் பங்கெடுக்கும் ஒரு சந்திப்பு வைக்கலாம். வாசித்தபின் இன்னொரு சந்திப்பு. வாசிக்க என்ன செய்யவேண்டும், எப்படி வாசிக்கவேண்டும் என்று சொல்லலாம். இன்னொரு கூட்டம் புதிதாக இந்நாவலை வாசிக்க முன்வந்தால்தான் வாசகர்கள் பெருகுவார்கள்

என்.ரகுபதி