Friday, August 21, 2020

குகன்

 

அன்புள்ள ஜெ

நான் இப்போதுதான் முதற்கனல் வாசிக்கிறேன். சொல்லப்போனால் நேற்றுத்தன தொடங்கினேன்

அன்னையே….” என்று கைகளை விரித்துக்கொண்டு அவள் காலடியில் கால்மடங்கி விழுந்து பணிந்து “என்ன ஆயிற்று? தேவி, உங்களை அவமதித்தவர் யார்? எளியவன் வேடன் என்றாலும் இக்கணமே அவன் வாயிலில் என் சங்கறுத்துக்கொண்டு சபித்துவிழுகிறேன் தாயே” என்று கூவினான்.

என்ற வரி நிலைகுலைய வைத்தது. காவியக்குகனாகவே நிருதன் தெரிகிறான். அந்த அர்ப்பணிப்பு எப்படி வந்தது? ராஜவிசுவாசம்கூட அல்ல. அவன் அவள் பிரஜை அல்ல. அந்த அர்ப்பணிப்பு முழுக்கமுழுக்க அறம்சார்ந்து வந்தது. அதுதான் மெய்யான பக்தி. நான் மெய்சிலிர்த்த இட்ம இது


ராமச்சந்திரன் ஜி.