Friday, August 14, 2020

மழைப்பாடலுக்கு மீண்டும்

 

அன்புள்ள ஜெ

நலம்தானே?

நானும் நலமே. வெண்முரசு முடிந்த மனநிலையில் இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். குறிப்புகளில் உற்சாகமும் அதேசமயம் ஓய்வும் தெரிகிறது.

நான் வெண்முரசின் மழைப்பாடலை மீண்டும் படித்துக்கொண்டிருக்கிறேன். முதற்கனலை சரியாக, முழுமையாகப் படித்துவிட்டேன் என்ற நினைப்பு இருக்கிறது. மழைப்பாடல் வந்தபோது கூர்ந்து வாசிக்கவில்லை. அப்போது ஒரு விதமான சலிப்பு சட்டென்று வந்தது. இதென்ன இப்படி மெல்ல மெல்ல போகிறதே என்ற எண்ணம். திருதராஷ்டிரர் கல்யாணம் செய்ததை எல்லாம் இப்படி விரித்துச் சொல்லவேண்டுமா என்ற நினைப்பு. ஆனால் எவ்வளவுபெரிய அஸ்திவாரத்தை அமைக்கிறீர்கள், எவ்வளவு பெரிதாகக் கட்ட நினைக்கிறீர்கள் என்பது அப்போது புரியவில்லை. பின்னர் புரிந்தபோது பிரமிப்பாக இருந்தது

உதாரணமகா, திருதராஷ்டிரனுக்கு பீஷ்மர் அளிக்கும் அந்த முதல் வாக்குறுதி. மொத்தமகாபாரதத்திலும் முக்கியமான திருப்பங்கள் அந்த நிகழ்ச்சியின் அடிப்படையிலேயே நடைபெறுகின்றன. அப்போது 3 அத்தியாயங்களில் அது விரிவாக வந்தது. பீஷ்மர் திருதராஷ்டிரன் முடிசூட ஆதரவளிப்பது துரியோதனனை ஆதரித்து களத்தில் சாவது வரை அந்த மனநிலையே காரணமாக அமைகிறது

 

சுரேஷ்குமார்