Friday, August 21, 2020

தத்துவம்

 

அன்புள்ள ஜெ

வெண்முரசு நாவல்களில் உள்ள தத்துவக்கேள்விகளைப் பற்றி எழுதியிருந்தார்கள். அந்தக்கோணத்தில் வாசிப்பவர்கள் மூன்றுநாவல்களை ஒன்றாகச் சேர்த்து அதற்குள் தொடர்ச்சியை கண்டடைந்து வாசிக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன். வெண்முரசில் பேசப்படும் அடிப்படைத்தத்துவங்கள் அனைத்தும் பேசப்பட்ட நாவல்கள் மூன்று. வண்ணக்கடல், சொல்வளர்காடு, கிராதம்

வண்ணக்கடலில் தொன்மையான சாங்கியம் யோகம் நியாயம் முதல் ஆதி சமணம் வரை பேசப்படுகின்றன. சொல்வளர்காட்டில் உபநிடதங்கள் பேசப்படுகின்றன. கிராதம் நாவல் வேதங்கள் உருவான பின்புலம் முதல் பாசுபதம் வரை பேசுகிறது. இந்த மூன்றுநாவல்களிலும் தத்துவங்கள் பேசப்பட்ட பகுதிகளை இணைத்து ஒரு தனிவிவாதம் அமைந்தால் நல்ல வாசிப்பாக அமையும்

ஜெயராமன்