Monday, August 24, 2020

சாரம்

  


அன்புள்ள ஜெ

நான் வெண்முரசில் அவ்வப்போது வரும் செய்யுட்களை படித்துக்கொண்டிருக்கையில் அவையெல்லாம் எங்கிருந்தோ எடுத்தாளப்பட்டவை என்ற எண்ணம் எனக்கு வந்தது. அவற்றுக்கான சொற்பொருளை தேடிச்செல்லும்போதுதான் அவை உங்களால் உருவாக்கப்பட்டவை என்பதை அறிந்தேன்

எரிமருள் காந்தள் செம்மலர் சூடி 

எரிசிதைச் சாரம் மேனியிற் பொலிய

கரியுரி இருட்தோல் கைக்கோள் ஆக

விரிசடை அண்ணல் ஆடிய கொட்டி

என்ற ஆசிரியப்பாவின் நான்கு வரிகள் சங்கப்பாடல் போலவே ஒலிக்கின்றன. ஆனால் உங்கள் எழுத்து. அதிலுள்ள சாரம் என்பதை வடமொழிச் சொல்லாக நினைத்தேன். பின்னர் அகராதியில்தான் அது சாம்பலுக்கான தமிழ்ச்சொல் என்று கண்டு தெளிந்தேன்

குமரவேல்