Friday, August 14, 2020

சகுனி இரு படிமங்கள்

 

அன்புள்ள ஜெ

வெண்முரசு சில படிமங்களை உருவாக்கி நிலைநிறுத்திக் கொண்டே செல்கிறது. நாவலின் தொடக்கத்தில் மகதன் காந்தாரத்துக்கு அனுப்பிய குதிரைச் சவுக்கு அப்படிப்பட்ட ஒரு படிமம். அது எரித்தாலும் அழியாதது. நீ வேடனாகிய துர்வசுவின் வம்சம் என்னும் வசை. அதுதான் மகதமே அழியக் காரணமாகிறது. அந்தச் சவுக்கிலிருந்து சகுனி விடுபடவே இல்லை. அதிலிருந்து அறுத்துக்கொண்டு தப்பிச் செல்கையில் ஓநாயின் கடி கிடைக்கிறது திரும்பி வருகிறான்

இந்த இரண்டு படிமங்களையும் நான் இப்படிப்புரிந்துகொள்கிறேன். சகுனி காந்தாரநாட்டின் வஞ்சத்துடன் அஸ்தினபுரிக்கு வந்தான். அதை உதறி திரும்பிச்சென்றபோது பாலைநிலத்தின் வஞ்சத்தை அடைந்து திரும்பிவந்தான், பலமடங்கு வேகமான வஞ்சம் அது

 

ஆர்.ராமகிருஷ்ணன்