Wednesday, August 26, 2020

நிழலும் மெய்யும்

 

அன்புள்ள ஜெ

வெண்முரசின் அழகே அவ்வப்போது அதில் வரும் மெட்டஃபிசிக்கலான தலைகீழாக்கங்களும் நுட்பங்களும்தான். அமராவதியின் நிழல் பூமியில் விழுந்தது. அதைக்கொண்டு சிற்பி படைத்தது அஸ்தினபுரி என்று ஒரு கதைசொல்லி சொல்கிறார். நான்கு வாசல்களில் எது அழகு குறைந்ததோ அதுதான் அமராவதியின் வடிவம். மற்றவை சிற்பியின் கற்பனைகள். ஏன்?

“தேவர்களின் அந்நகரின் நிழலே மண்ணில் விழுந்தது. அது குறைவுபட்டதே. மண்ணுக்காக இறங்கிவந்தமையாலேயே அது மானுடத்தன்மைகொண்டது. அதைக் கண்டு தேவருலகை கற்பனை செய்து சிற்பி சமைத்தது அவன் எல்லைகளைக் கடந்து அமரத்தன்மை கொண்டது என்று அவர் சொல்கிறார். அழகான ஒரு மெட்டஃபிசிக்கல் உவமை இது. தேவர்கள் அளிப்பதைவிட தேவர்களுக்கு மனிதர்கள் அளிப்பது மிகுதி. தேவப்பிரசாதமான மழை மண்ணுக்கு வருவதனாலேயே குறைவுபட்டது. அவிஸ் இங்கிருந்து விண்ணுக்குச் செல்வதனாலேயே மழையை விட தூய்மையானது

சுவாமி