ஜெ
வெண்முரசு ஒரு நவீனநாவல் என்பதற்கான சான்றாக நான் சொல்வது இந்த போர்க்காட்சிகளில்
இருக்கும் தத்ரூபம் மட்டுமல்ல. இதில் ஒரு மென்மையான அங்கதமும் அபத்தமும் ஓடிக்கொண்டே
இருக்கிறது. போரை நெருங்கியதும் போரை அதுவரை இழுத்துக்கொண்டுவந்த சகுனிக்கெல்லாம் ஆர்வம்போய்விட்டது.
போர் வேறுவழியில்லாமல் போர்க்களம் நோக்கிச் செல்கிறது. அதை நடத்துபர்கள் எல்லாமே மந்தித்துப்போயிருக்கிறார்கள்.
கேலிக்கூத்துபோலவே எல்லாம் நடைபெறுகிறது. அதை சலன் சொல்கிறான். அப்படித்தான் நடக்கமுடியும்
என்று தெரிகிறது. உச்சகட்ட அபத்தம் ஒரு பேரழிவுக்கு முன் உயிருள்ள மூதாதை வருவது. அவர்
வேறெங்கோ சதா யானை ஞாபகமாக இருக்கிறார். இந்த அபத்த அம்சம் நவீன இலக்கியம் வந்தபிறகு
உருவானது என நினைக்கிறேன்
முருகேஷ்