Monday, July 2, 2018

பிதாமகர்




ஜெ

அரசவையில் பால்கிகரை அனைவரும் வணங்கி வாழ்த்து பெறும் காட்சி சாதாரணமாக சொல்லப்பட்டிருந்தாலும் மிகப்பெரிய அர்த்தங்களை அளித்தது. அது சொல்லப்படவில்லை, காட்டப்படுகிறது. ஆகவே அங்கே நாமும் இருந்து அதையெல்லாம் பார்க்கிறோம் என்ற எண்ணம் ஏற்பட்டது. அவர்கள் அழுவதும் உணர்ச்சிக்கொந்தளிப்படைவதும் அன்றைய மனநிலையைக் காட்டுவது என தோன்றுகிறது. இன்றைக்கும்கூட ஒரு சபையில் நூறுவயதான ஒருவர் வந்துவிட்டார் காலில் விழுந்துவிடுவார்கள். அது நம்முடைய பண்பு. அந்த பிதாமக வழிபாடு அந்த இடத்தில் அபத்தமாகவும் உள்ளது. ஏனென்றால் அதைத்தாண்டி அவர்கள் அவர் கண்முன்னால் சண்டைபோட்டுச் சாகவும் போகிறார்கள். பிதாமகர் ஒரு கோயில்சிலையாகவே இருக்கிறார். கல்லால் ஆன சிலைபோல. அவருக்கு ஒன்றுமே தெரியாது. அவர் பாட்டுக்கு இருக்கிறார். சின்னப்பிள்ளைபோல விளையாடிக்கொண்டிருக்கிறார்.

லட்சுமி