Friday, July 6, 2018

குண்டாசியைத் துரத்தும் கனவு



ஜெ

குண்டாசியைத் துரத்தும் கனவாக இருப்பது வெண்முரசு வண்ணக்கடலில் வரும் காட்சி. குண்டாசி சின்ன குழந்தை. கௌரவர்களும் பாண்டவர்களும் கங்கையில் நீர்விளையாடச்செல்கிறார்கள். அங்குதான் குண்டாசி தூக்குங்கள் மூத்தவரே என்று கெஞ்சியபடி பீமனின் ஆடையைப்பிடித்து இழுத்துக்கொண்டே இருக்கிறான்

அந்த நீராடலில்தான் பீமனைக் கொல்லமுயல்கிறார்கள். பீமன் நஞ்சுண்பது அதற்குப்பின்னர்தான். அதற்குப்பின்னால்தான் இத்தனை வஞ்சமும் முதிர்ந்து போராக ஆகிறது.

பீமனின் காலைப்பிடிக்கும் குண்டாசியை தூக்கி வீசுவது துரியோதனன். அவன் இவ்விருவருக்கும் நடுவே அலைக்கழிகிறான். அவனுடைய வாழ்க்கையே இதுதான். வாரணவதத்தில் பீமனைக்கொல்ல துரியோதனன் செய்த சூழ்ச்சியை அறிந்ததனால்தானே குண்டாசி இப்படி ஆனான்

குண்டாசியின் கதாபாத்திரம் ஒரு துயரமான கதையாக உள்ளது

மகேஷ்