Friday, July 6, 2018

காலம்




அன்புள்ள ஜெ

வெண்முரசின் அனுபவங்களில் முக்கியமானது காலத்தை அனுபவமாக்குவதுதான். ஒவ்வொன்றையும் வாழ்ந்து அறிந்தபடியே தலைமுறைகளைத் தாண்டிவந்திருக்கிறார்கள் வாசகர்கள். குன்டாசியை சின்னக்குழந்தையாக பார்த்திருக்கிறோம். இப்போது அவன் நோயுற்று சாம்பல்பூத்த உடலுடன் சடலம்போல் இருக்கிறான். அவன் தன்னைத்தானே கன்ணாடியில் பார்க்கும் அந்தக்காட்சியை எண்ணிப்பார்க்கவே முடியவில்லை. அவனுடைய நோயும் அதனால் வரும் நஞ்சும் மனதை உலுக்கும் கதாபாத்திரக் கற்பனையாக உள்ளன. குண்டாசியை பீமன் கொல்லும் காட்சி ம்முன்னரே சொல்லப்பட்டுவிட்ட்து. மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தப்படுகிறது. ஆனாலும் அந்தக்காட்சியை வாசிக்கையில் நெஞ்சு பதறும் என்றுதான் தோன்றுகிறது

ஜெயராமன்