Thursday, July 5, 2018

குருக்க்ஷேத்திரம்



அன்புள்ள  ஜெயமோகன் அவர்களுக்கு

செந்நாவேங்கை வாசித்துக்கொண்டிருக்கிறோம்

வாசகர்களாகிய நாங்களும் குழுமத்திலும் தனிப்பட்ட முறையிலும்  போர் குறித்து பலதும் விவாதித்துக்கொண்டுமிருக்கிறோம்

ஏன் பாரதப்போருக்கு குருஷேத்திரம் என்னும் இடம் தேர்வு செய்யப்பட்டது?   அத்தனை லட்சம் பேர் போரிடும் அளவிற்கு பெரிய நிலப்பரப்பு என்பதாலா, அன்றி வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கின்றதா?

நீங்கள் இனி வரும் நாட்களில் எழுதுவதாக இருந்ததை  நான் அவசரப்பட்டு முன்னாலேயே கேட்டிருந்தால் மன்னிக்கவும்

அன்புடன்
லோகமாதேவி

அன்புள்ள லோகமாதேவி

அப்படி தனிப்பட்ட காரணம் ஏதுமில்லை, அது ஒரு திறந்த வெளி என்பதைத்தவிர. அது எப்போதுமே போர்க்களம்தான். ஏன் அது போர்க்களமாக இருந்தது என்பது எழுதழல் முதல் பகுதியில் வருகிறது

அங்கேதான் விருத்திரனை இந்திரன் வென்றான் என்பது தொன்மம்

ஜெ