ஜெ
இன்றைய அத்தியாயத்தில்
பீஷ்மரின் முதுமையும் அவர் பேச்சில் உள்ள தடுமாற்றமும் அவர் அவ்வப்போது மறந்துபோவதும்
மிக மிக யதார்த்தம். ஆனால் அவர் கனிந்து முதிர்ந்து சென்றுசேரும் அர்த்தமில்லாமை ஒரு
வாழ்க்கைத்தரிசனமா என்று சந்தேகமாக இருக்கிறது. வாழ்க்கைத்தரிசனத்தை வாழப்போகும் வயதில்
அடைந்தால்தான் அது தரிசனம். வாழ்ந்துமுடிந்தபின் அடைந்தால் அது தரிசனமே அல்ல. அவருடையது
வெறும் தளர்ச்சி. முடியலை என்பதைத்தான் அவர் அப்படியெல்லாம் சொல்கிறார் என் நினைக்கிறேன்.
ஆனால் அவர் அதை மிக இயல்பாகச் சொல்லுமிடமும் அதைவிட இயல்பாக அவருடைய முதுமைப்பேச்சை
சகுனி முடித்துவைக்கும் இடமும் அழகாக வந்திருந்தன. பால்ஹிகர் ஒரு பெரிய ஃபேண்டஸி. இவர்
யதார்த்தம். இரண்டும் அருகருகே அமைந்துள்ளன. அதுதான் வெண்முரசின் அழகு
மகாதேவன்