Thursday, July 5, 2018

உருவக அணி




போர்க்கூச்சல்களுடன் படைக்கலங்கள் காற்றிலெழுந்து சுழன்று சுழன்றமைந்தன. அக்கூச்சலை அவை நாவுகளென எழுப்புவதுபோல தோன்றியது. 

என்றவரியின் எளிமையான காட்சியழகையும் அதன் உருவக அழகையும் மிகவும் ரசித்தேன். இத்தகைய காட்சிகள் மிகவும் தொன்மையானவை. உருவக அணி என்பார்கள். ஆனால் இலக்கியம் தோன்றியகாலம் முதல் இன்றுவரை இவைதான் இலக்கியத்தின் அடிநாதமாகவும் இருந்திருக்கின்றன. ஒருவகையில் காலம் கடந்து நிற்பவை இத்தகைய வரிகள்தான். அந்தச் சபை வாள்களை நாக்குகளாகக் கொண்ட ஒரு வெறிகொண்ட மிருகம். அது ஓலமிடுகிறது

நீங்கள் எப்போதுமே இப்படிப்பட்ட பராக்குபார்க்கும், கொஞ்சம் குழந்தைத்தனமும் உள்நோக்கியபார்வையும் கொண்ட மனிதர்களையே கதையின் பார்வையாளர்களாக ஆக்குகிறீர்கள். ஒருபோதும் துச்சாதனனோ சுபாகுவோ துரியோதனன்கூடவோ மையமாக வந்து கதையை நமக்குக் காட்டுவதில்லை. ரொமாண்டிக் ஆனவர்களே கதைசொல்கிறார்கள். மற்றவர்கள் அவர்கள் வழியாக நமக்குக் காட்டப்படுகிறார்கள். அதற்குக்காரணம் மேலே சொன்ன வரியை பூரிசிரவஸ்தான் பார்க்கமுடியும் என்பதுதான்


ராமச்சந்திரன்