அன்புள்ள ஜெ
வெண்முரசின் மிகச்சிறந்த தந்தை
என நான் நினைப்பவர் விதுரர்தான். கடைசிவரை விதுரரின் மனநிலையை உற்றுக்கவனித்துக்கொண்டிருந்தேன்.
அவர் பாண்டவர்களின் தந்தை. மணக்காமல் போன மனைவியின் பெறாத பிள்ளைகளின் அப்பா. அந்த
அன்பிற்கு சமானமான அன்பே இல்லை. அது ஒரு ஃபினாமினன். அதற்கு ரத்த உறவே இல்லை. ஒரு மானசீகபாவம்
மட்டும்தான். அதுதான் மிகச்சிறந்த அன்பு என்று தோன்றிக்கொண்டே இருக்கிறது. கடைசியில்
அவர் குந்தியுடன் விலகிச்செல்லுமிடத்தில் அதுதான் மனசை மிகவும் பாரமாக உணரச்செய்தது
எஸ்.மாரிக்குமார்