ஜெ
வெண்முரசு தொடங்கும்போது முதற்கனலில்தான் ஹஸ்தி பற்றி வருகிறது. ஹஸ்தி என்றால்
யானையன். அவர் யானைகளைக்கொண்டு ஹஸ்தினபுரியை அமைத்தார். அவர் யானைபோல உடலும் ஆற்றலும்
கொண்டிருந்தார். யானைகளுடன் பேசினார். இதெல்லாம் அப்போதே இருந்தன. அதன்பின் ஹஸ்தி சொல்லப்பட்டுக்கொண்டே
இருந்தார். பீமன் பலசமயம் ஹஸ்தியுடன் ஒப்பிடப்பட்டார். துரியோதனனும் திருதராஷ்டிரரும்கூட
ஹஸ்தியுடன் ஒப்பிடப்பட்டார்கள். ஆனால் அவர் ஒரு தொன்மமாகவே இருந்தார். திடீரென்று அவரைப்போல
ஒருவர் வந்து அவருடைய அரியணையில் இயல்பாக அமர்கிறார். இந்த மேஜிக்தான் வெண்முரசின்
அழகு. முதற்கனல் முதல் பால்ஹிகரின் கதாபாத்திரம் எப்படியெல்லாம் வளர்ந்து வந்துள்ளது
என்பது ஆச்சரியமான ஒன்று
மாணிக்கம்