Wednesday, March 21, 2018

சொல்லவைக் குறிப்புகள் - 2 (குருதிச்சாரல் - 75)





த்வன்யன்:  உள்ளம் செலுத்தாமல் வேள்வித் தீயை  பேணுபவன் வெறும் அடுப்பூதும் குழல் அல்லவா? பொருளறியாமல் வேதம் சொல்லுதலும் தவளை சத்தமிடுவதும் ஒன்றல்லவாஇப்படி வாழ்நாளெல்லாம் கருத்தூன்றாமல் வேதமோதி வேள்விசெய்பவன் அடைவது ஏதுமில்லைஅவன் தன்னை வெற்றுகலமென்றே உணர்வான். ஆகவே இந்த பொருளற்ற வேள்விச் சடங்குகளை  வேதம் ஓதுதலை புறந்தள்ளி நாம் முன்னேறிச் செல்லவேண்டும்

வசிட்ட குந்ததந்தர்:   இப்படி எண்ணுபவன் போய்ச் சேரும் இடம் வேத முடிபுக்கொள்ளகை ஆகும்.    ஆனால் அங்கிருக்கும் கருத்துக்களிலும் முரண்கள் இருக்கும் அதனால் அதைவிட்டும் அவன் விலகிச்செல்வான். அப்போது அவன் மீண்டும் அளவை நெறி  நோக்கியே வரவேண்டும்இளமையின் வேகத்தால் எழும் இந்த கருத்துக்கள் முதுமையின் அனுபவம் மட்டுமே மாற்ற வல்லது. ஒருவன் உள்ளிருந்து சொல்லுக்கு பொருள்கேட்டு கேள்வி எழுப்புவது  சித்தம் அல்ல அவன் ஆணவமே.  
     
ஒரு தத்துவப்பள்ளியில் ஒன்றையும் அடையாது போனவன் வேறெந்த தத்துவபள்ளியிலும் எதையும் அடையமாட்டான்.

த்வன்யன் உள்ளம் பொருளுணர்ந்து வேதம் பயிலவிட்டால் அது ஒரு கற்பாறையைப்போன்று மாற்றமின்றியல்லவா இருக்கும்இப்படி வேதம் ஓதுதல் என்பதும் வெற்றொலி எழுப்புவதும் எப்படி வேறுபடும்?
கௌதம சிரகாரி:  வேள்வியில் வேதம் ஓதுதல் என்பது நாவை மட்டும் பழக்குவதில்லை அது உள்ளத்தையும்  பழக்குகிறதுஅதன் மூலம் உள்ளத்தின் ஆழத்தில் வேதத்தை நிலை நிறுத்துகிறதுவிலங்குக்குட்டிகள்  சில அறிவை தான் பிறக்கையிலேயே கொண்டிருக்கின்றனஅவை அதன் குருதியிலேயே இருப்பதைப்போல வேதமும் ஒருவரின் குருதியில் சென்று கலக்க வேண்டும்வேதமுடிபு தனிப்பட்ட ஒருவரின் மீட்பை இலக்காகக் கொண்டதுஒருவர் தான் அடைந்த மீட்பை மற்றொருவருக்கு பகிர முடியாது. அவருள் எழும் முழுமை அவருடன் மறந்து போகிறது.    
     
மெய்மை என்பது தனிப்பட்ட மானுடன் உள்ளத்தால் அடையக்கூடியதல்ல. உள்ளம் மொழியால் சிந்திப்பதுமொழிக்கு எல்லை உள்ளதுஆகவே ஒருவன் அறியும் ஒன்று  அவன் சிந்தையில் மொழியென  ஆகி பதியப்படுகிறது. ஆனால் மொழிக்கு எல்லை உண்டு ஆகவே அந்த எல்லைக்குள் துண்டிக்ககப்பட்டதாக அந்த சிந்தனை இருக்கிறது. ஒரு கருத்துக்கு மறு கருத்தும் எதிர் கருத்தும் எற்படுகிறது என்பதால் மாறா முழு மெய்மை என  ஆக முடியாது. இது அளவை நூல்களில் முதல் அறிதல்
    
உள்ளம் மற்றும் எண்ணம் உடலின் உறுப்புகளேஉள்ளம் அறிந்திருப்பதை உடல் அறிந்திருப்பதாகவே கொள்ளவேண்டும்ஆனால் நம் உள்ளம் அறியாததை உடல் அறிந்திருக்கிறது. ஆகவே உள்ளம் கற்பதை விட உடல் அதிகம் கற்கும். ஆகவே  உடலுக்கு கற்பிப்பதே உண்மையான கல்வி. அதற்கு ஐம்புலன்களாலும் உள்ளத்தாலும் சித்தத்தாலும்  ஆற்றப்படும் அளவை நெறியின் வேள்விகள் போன்ற செயல்கள் உதவுகின்றனசெயல் என்ன விளைவுகளைத் தருகிறது என்பதை தம் சித்தத்தால் முழுமையாக அறிந்துகொள்ளமுடியாது.  
கல்வி என்பது   நம் கைகளில் நிகழ்வதை(செயல்களை) நனவாக்கி அதை கனவுக்குள் செலுத்தி அதன்மூலம் மன ஆழத்தில் உணர்ந்து துரியத்தில் சேர்வதாகும்துரியத்திற்குள் செல்வதற்கான வாசல்களாக நம் கைகள் (செய்கைகள்) இருக்கின்றனஉலகமென இருப்பது உடலே. உலகு சிற்றுரு வென இருப்பது உடல்ஆகவே உலகின் ஞானத்தை உடலிலும் அமையச்செய்வது அளவநெறியின் நோக்கமாகும்நம் செயல்களினால் பெரும் மெய்மை நம் ஆழுள்ளத்தை அடையாமல் போவதற்கு காரணம் நம் ஆணவமே. முழுமையை வேத முடிபு ஆணவத்தினூடாக  அறிகிறது. அளவைநெறியில் ஆணவத்தை அகற்றி அறிகிறோம்
       
அளவை நெறி எளியோருக்கும் வலியோருக்கும் உரியது. ஆனால் வேதமுடிபு என்பது முனிவருக்கு மட்டுமே பயனளிப்பதுஅளவை நெறி ஆணவத்தை அழிப்பதை போதிக்கிறது. அவன் தன் செயலின் பலனை மனதில் கொள்வதில்லை. அளவை நெறியாளன் தன்னை ஒரு திரளின் துளியென்று உணர்கிறான். வேத மெய்மை பலரால் கூட்டாக  அடைய  முயல்வதாகும். அதில் தனிப்பட்ட ஒருவன்  தான் என்ன செய்கிறேன் என்பதை அறியாதிரூக்கலாம். அவர் தன்னை திரளில் ஒருவரென உணர்ந்தாலே போதும்.
  
வேள்வி என்பது ஒரு கொடை. வேள்வியால் பிறக்கிறோம் வேள்விக்காக செயல் புரிகிறோம். வேள்விக்கே நம்மை அவியாக்கிக்கொள்கிறோம் . முழுமை நோக்கி செய்யப்படும் செயல்கள் எல்லாம் வேள்விகளேஇப்போது வேள்வி  என செய்யப்படுபவை முழுமைகொண்ட செயல்களிலிருந்து முன்னோர் திரட்டிஎடுத்த அடையாளச்செயல்கள். வேள்வி என்பது ஒரு முழுமைச்செயலை நடித்துக் காண்பிப்பது. அல்லது அப்படி ஒரு செயல் செய்யப்பட்டிருப்பதை  நினைவுகூரும் படிமம். மீண்டும் மீண்டும் நிகழ்ந்துவருவது. இதைச் செய்கையில் நாம் முன்னோர்களை நம்முடன் இணைத்துக்கொள்கிறோம். பின்னர் வரப்போகும் தலைமுறையினருடன் நம்மை பிணைத்துக்கொள்கிறோம்இத்தகைய வேள்விகள் சடங்குகள் இல்லையென்றால் தலைமுறைதலைமுறையாக வரும் மனிதர்கள்  இணைப்பின்றி போய்விடுவர். இச்செயல்களுக்கு(வேள்விகளுக்கு) பொருள் என்ன என்பது நம் சித்தம் அறியாமல் போகலாம். ஆனால் நம் ஆழுள்ளம்  நம் துரியம் அதை அறிந்துகொள்ளும்.   ஆகவே வேள்விகளுக்கான பொருளை சித்தம் அறிந்துகொள்ளத்  தேவையில்லை.
   
இச்சடங்குகள் என்றும் மாற்றத்திற்கு ஆளாகாதவை. மாற்றக்கூடாதவைஇச்சடங்குகளை ஆற்றுவதே தம் வாழ்வெனெ இருப்பவர்தான் அளவநெறியினர். அவர்களுக்கு வேறு கடமைகள் ஏதுமில்லை.
 
குண்டஜடரர் :  வேத முடிபு  தரப்பினர் வேள்விகளை விட வேதங்கள், பின்னர் வேதங்களில் ரிக் ஒன்றே மற்றும்  ரிக் வேதத்திலும் அதன் முடிவுப்பகுதி, என விலக்கி விலக்கி சென்று கொண்டே இருந்து வெறும் அமைதியே போதும் என செல்பவர்கள். ஆனால் அது வெறுமையில் ஒருவரை சேர்ப்பது. அவர் அங்கு கொள்வது முற்றான தனிமைஅது அளவைநெறியினைருக்கு உகந்ததல்ல.

திரிசோகர்வேதத்திற்கு முழுமையான பொருளைக் காண முடியாது அப்படி முயன்றால் வேதத்தின் ஒரு பகுதியின் கருத்து  மற்றொன்றை முரண் எனக் கொண்டு தவிர்க்கவைக்கும்ஒரு நாகம் தன் வாலை தானே கவ்வி விழுங்க முயல்வதைப்போன்றது அது. ஆனால் அளவை நெறியினர் வேதத்தை ஆராய்பவர்கள் இல்லை. அதிலிருந்து நற்பயன்களை மட்டும் கறந்தெடுப்பவர்கள்வேதத்தால் வேதத்தை மறுப்பது வேதத்தின் முதன்மைக் கருத்தினால் வேதச் சடங்குகளை மறுப்பது, வேதத்தை கடந்துசென்று ஒன்றை அடைவது என்பது எதுவும் இயலாத கூடாத வழிகளாகும். இபடி ஒருவர் முயல்வது அவர் ஆணவத்தை  காட்டுகிறது.
                                                                                                                    (
தொடரும்)

தண்டபாணி துரைவேல்