ஜெ.
வேதசபையில் கிருஷ்ணன் பேசத்தொடங்கிய
இடம் எது என்று கௌதமசிரகாரி பேசி முடித்தபிறகுதான் புரிந்துகொள்ள முடிந்தது. அவர் வேதத்தின்
அமைப்பு ஒலி எதையுமே மாற்றக்கூடாது என்கிறார். வேதங்களுக்கிடையே வேறுபாடு உண்டு என்றால்
வேதத்திற்கு தூய பகுதி ஒன்று உண்டு என்றுதானே அர்த்தம்? அதை வைத்து தூய்மை குறைந்த
பகுதியை மதிப்பிடுவோம் என்றால் அதையே அடிப்படையாக வைத்து வேதத்தை மாற்றினாலென்ன என்று
கிருஷ்ணன் வாதிடுகிறார். அதை உணர்ந்து அவர்களும் தங்கள் வாதங்களை வைத்து முடிக்கிறார்கள்.
அந்த வாதங்களை அவர்களின் உவமைகளின் வழியாகவே கிருஷ்ணன் முறியடிக்கிறார். எல்லா அத்தியாயங்களையும்
வாசித்து முடித்தபோது இந்த அத்தியாயம் எப்படி சீராகத் தொடங்கி சரியான வடிவத்தில் முடிவடைகிறது
என்பது ஆச்சரியப்படுத்தியது
சுவாமி