அன்புள்ள ஜெ
இந்த இடைவெளியில்
வெண்முகில்நகரம் வாசித்துக்கொண்டிருந்தேன். திடீரென்று ஓர் எண்ணம் வந்தது. கீழே மண்ணில்
இத்தனை அதிகாரப்போட்டிகளும் முட்டிமோதல்களும் நிகழ்கின்ரன. பூரிசிரவஸ் சென்று தங்கும்
அந்த இமையமலைமுடியில் ஒரு பிரச்சினையும் இல்லை. வாழ்க்கைஅப்படியே சீராகச் சென்றுகொண்டிருக்கிறது.
காலத்தில் அலைகளே இல்லை. அங்கேதா பால்ஹிகர் வந்து தங்குகிறார். அவருக்கும் காலம் இல்லாமலாகிவிடுகிறது.
கீழே நிகழவிருக்கும் போருடன் ஒப்பிட்டுப்பார்க்கையில் இந்த வேறுபாடு பயங்கரமாக இருக்கிறது
முருகேஷ்