அன்புநிறை ஜெ,
இந்த சிலநாட்களாய் வெண்முரசில் நிகழும் உச்சத்திற்கு வணக்கம்.
மெய்மை குறித்தும் வேதமுடிபு குறித்தும் இதனினும் தெளிவாகத் தாயினும் பரிந்து எப்படி விளக்க முடியும்!!
//சடங்கு ஆய்ச்சி, மெய்மை அவள் தலையிலமர்ந்த நெய்க்குடம். அதை நிலைநிறுத்திக் கொண்டுசெல்லும்பொருட்டே அவள் உடலில் எழுகின்றன அனைத்து அசைவுகளும். உடல் உலைந்தாடுகையிலும் அசையாமலிருக்கிறது அவள் தலைச்சுமை. அசைவன அனைத்தும் அசைவின்மை பொருட்டே நிகழ்கின்றன அவளில். செயலில் செயலின்மையும் செயலின்மையில் செயலையும் காண்பவரே மெய்யறிந்தோர் என்க.”//
மெய்ப்பும் துடிப்பும் சுப்ரியைக்கு மட்டுமல்ல.
விஸ்வரூபம்!!!!
வணக்கங்களுடன்,
சுபா