அன்புள்ள ஜெ
அளவைவாதிகளின்
தரப்பின் முக்கியமான மூன்று உவமைகள் உள்ளன. ஒன்று மலையுச்சி. இன்னொன்று கங்கை. இன்னொன்று
கட்டைவிரல். மலையில் கிராமங்களே இருக்கமுடியும், உச்சியில் காலூன்றத்தான் இடமிருக்கும்.
கங்கை கோமுகத்தில் தூய்மையானது. ஆனால் சமவெளியில்தான் பயனுள்ளது. கட்டைவிரலுக்குத்
தெரிந்ததுகூட சிந்தனைக்குத்தெரியாது. பரிணாமம் எப்படி கட்டைவிரலை உருவாக்கியதோ அப்படி
ஆழ்மனதை பயிற்சிசெய்வதே அவர்க்ளின் வழி
அந்த மூன்று உவமைக்கும்
கண்ணன் விரிவாகப் பதிலளிக்கிறான் உச்சிமலைமுடி மலையே அல்ல. அது வானத்தில் நிற்கிறது.
அதுவே அந்தமலையை அடையாளம் காட்டுவது. கட்டைவிரலைவிட ஒரு வார்த்தையில் அதிக பரிணாம வரலாறு
உண்டு. கங்கையின் தூயநீராகவே எல்லா நீரையும் உருவகம் செய்கிறோம். இந்த விவாதம் கவித்துவமாக
இருந்தாலும் கறாரான தத்துவமாகவும் புரிந்துகொள்ளக்கூடியதாகவே உள்ளது
ஜெயராமன்