Thursday, March 29, 2018

குருதிச்சாரலின் முடிவு



இனிய ஜெயம் 

குருதிச்சாரலின் இறுதி அத்யாயம் சார்ந்து யாரேனும் எழுதுவார்கள் என எதிர்பார்த்தேன் .  மதுசூதன் சம்பத் எழுதி விட்டார் . மகிழ்ச்சி .  தீவிர தமிழ் புனைவுகள்  ஒரு பாலகன்  ''வயதடையும் '' தருணத்தை வித விதமாக அணுகிப் பார்த்திருகின்றன .இக் கணம் நினைவில் எழுவது , நீங்கள் எழுதிய கிளிக்காலம் , அசோகமித்திரன் எழுதிய பதினெட்டாவது அட்சக்கோடு .

பதினெட்டு நாவலில்  நாயகன் நிற்கும் நிலத்தை வரலாறு வகிர்ந்து செல்கிறது . அதன் ஒரு வீச்சு  அவன் ''வயதடையும் '' தருணத்தை தீர்மானிக்கிறது .

அந்த நாவலை அடிப்படையாக கொண்டு , இந்த பெருங்கொடை  அத்யாயத்தில் வரும் அவிரதன் சித்தரிப்பை அனுகிப்பார்த்தால் வென்முரசு அதன் தருனங்களுக்குள் வைத்திருக்கும் இணையற்ற ஆழம் கூடிய மர்மங்களில் ஒன்று இது என விளங்கும் .

அவிரதனின் நிலை முழுமையாக சித்தரிக்கப்படுகிறது .அவனது குடும்ப சூழல் ,அவனது சகோதரர் ,தாய் ,தந்தை நிலை ,அவனது ஏக்கம் ,அவனது வேத முழுமை கொண்ட உடல் ,அவனது பயம் எல்லாமே முழுமையாக சித்தரிக்கப்படுகிறது . 

எனில் அவனது காமம் ? 

அவனது காமம் கண் விழிக்கும் கணமே அந்த இறுதி அத்யாயம் . ஆம் அவனது பெயர்க்காரணமே அந்த தருணத்தின் அழத்தை சுட்டுகிறது .அ  விரதன் .

ஏன் கௌரவர் தரப்பு போரில் வீழ்கிறது .ஏன் எனில் அவர்கள் முன்னெடுத்த புருஷமேதம் யாகம் ,அதில் ஆவி என போடப்பட்ட உடல் ,தூய விரதம் கொண்ட உடல் அல்ல . அவன் அப்போது அ விரதன் .  நாகர்களின் வெற்றி .

கடலூர் சீனு