Tuesday, March 20, 2018

உரையாடல்


அன்பு ஆசிரியருக்கு,


முதலில் உங்கள் உரை  கேட்பதற்காக வெய்யில் நூல் வெளியீட்டு விழாவிற்குதான் வருதாக இருந்தேன்.பிறகு வெண்முரசு விவாத நண்பர்கள் உங்களிடம் தனியாக விவாதிக்கலாம் எனக்கூறியவுடன் மிகவும் மகிழ்வுடன் தங்களைக் காணவந்தேன்,விவாதிக்க அல்ல உங்களுடன் சற்று நேரம் இருக்கலாம் என்ற காரணத்தால் என் மகனையும் அழைத்துவந்தேன்.நித்யாவுடன் உங்களின் விவாதங்களையெல்லாம் படிக்கையில் அம்மாதிரியான வாய்ப்புகள் வாய்க்கவில்லையே என ஏக்கமாக இருக்கும்.அவை சற்று தணிந்தது என்றே சொல்லவேண்டும். 


தத்துவ விவாதத்தை பற்றிய விளக்கம் பெற வேண்டும் என்பது முக்கிய நோக்கமாக இருந்தாலும் அதற்கு வெளியே நீங்கள் கூறிய விபரங்கள்தான் மெய்யாய் பெற்ற பலன்.கல்விக்கு குரு எவ்வளவு அவசியம் என்பது தெளிவாகப் புரிந்தது.உங்களுடனேயே இருக்கும் நண்பர்கள் பெரும்பேறு பெற்றவர்கள்.விவாதம் என்ற பெயரில் உங்களின் உரையாடலை அருகமர்ந்து கேட்டது மிக்க மகிழ்வளிக்கிறது.கல்வி என்பது பாடநூல்களுக்கு வெளியே என்பதுபோல வாசிப்பு என்பது சொல்லப்பட்டதற்கு வெளியே என்பது  தெளிந்தது.சென்னை வரும்போதெல்லாம் இம்மாதிரி ஒரு சந்திப்பை நிகழ்த்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.


கா.சிவா