‘காலமிலியில் அமர்ந்த காவியங்கள் அங்கே சொல்லப்படவேண்டும் என்றாயிற்று. ’ – வியாச பாரதம் இமைக்கணக் காட்டில் (நைமி ஷாரண்யம்) உக்ரசௌதி சௌதியால் (கிராதத்தில் வரும் உக்ரனே தான்) அங்கிருந்த முனிவர்களுக்குச் சொல்லப்பட்டது தானே. காலமிலியில் அமர்ந்த ஒரு காவியமான அதன் மற்றுமோர் சிறகசைவான வெண்முரசும் அங்ஙனமே அமைக. ஓம், அவ்வாறே ஆகுக!!
அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்