Sunday, March 4, 2018

செவ்வியல்

பெருமதிப்பிற்குரிய ஜெமோ. அவர்களுக்கு,



வணக்கம். 

சமீபகாலமாக "வெண்முரசு" படிக்கும்போதெல்லாம் மனதில் நெருடிய - பல்லிடுக்கில் மாட்டிக்கொண்ட பாக்கு துண்டு போல் - கேள்விக்கு விஷால் ராஜா அவர்களின் கருணையால் விடை கிடைத்தது.வெண்முரசில் ஏறத்தாழ எல்லா கதாபாத்திரங்களும் புத்திசாலித்தனத்துடனும்,நயத்துடனும் விரிவாக பேசுவதை எனது அறியாமையால் சற்று செயற்கையாக இருப்பதுபோல் கருதிவந்த எனக்கு  இந்த பதில்...   “ஒரு செவ்வியல் படைப்பில் எல்லோருமே புத்திசாலிகளாகத்தான் இருப்பார்கள். ஏனெனில் யாருக்கு சொல்ல ஏதாவது இருக்கிறதோ, அவர்களே படைப்பில் பேச அனுமதிக்கப்படுகிறார்கள். இத்தகைய குற்றச்சாட்டுகளே செவ்வியல் வாசிப்பு நமக்கு பழக்கம் இல்லாததால்தான் எழுகின்றன. தஸ்தாவெய்ஸ்கியின் நாவல்களில் மிக நீளமான உரைகள் உண்டு. செவ்வியல் இலக்கியங்களோடு அறிமுகம் உள்ள யாரும் இத்தகைய கேள்விகளை கேட்க மாட்டார்கள்”


பொட்டில் உரைத்ததுபோலிருந்தது!. மாபெரும் காவியம் வடிக்கும் தங்களை போன்றவர்களுக்கு இந்த சுதந்திரம் கூட கொடுக்கப்படவில்லையென்றால்  
மாபெரும் நஷ்டம் வாசகர்களாய எங்களுக்குத்தான்  என்பதை இப்போது நன்குணர்ந்தேன்.

அன்புடன்,

அ .சேஷகிரி.