ஜெ சார்
கிருஷ்ணனின் விஸ்வரூபம்
வரும் இடங்களில் ஒன்று மகாபாரதத்தில் கிருஷ்ணதூது முடியும் இடம். இதை நிறைய புராணப்பேச்சுக்களில்
கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த விஸ்வரூப தரிசனம்வெண்முரசிலே வரமுடியாது. ஆனால் வேறுவகையிலே
ஒரு விஸ்வரூபதரிசனம் இந்த பகுதிகளில் வந்துள்ளது. மானுட அறியாமைக்குமேல் எழுந்து நின்றிருக்கும்
கிருஷ்ணனின் முகமும் அந்த துயரமும் அவதாரபுருஷனின் துக்கமாகவே தோன்றியது. உண்மையான
விஸ்வரூபம் இதுதானோ என்று நினைத்தேன். அந்த உச்சத்தில் நின்றபடி கிருஷ்ணன் சொல்லும்
சொல் எல்லாமே கவிதைபோல முழக்கமிடுகிறது
ஆனந்த்