Friday, March 23, 2018

சொல்லவை குறிப்புகள் - 4 (குருதிச்சாரல் - 77)



அஸ்வத்தாமன்:   அசுர வேதம், அரக்கவேதம், நாகவேதம் ஆகியவற்றைக்கொண்டவர்கள் வேதமுடிபுக் கொள்கையை நிலை நாட்ட உதவுவர்களா?  
கிருஷ்ணர்: 
·    அசுர வேதம், அரக்கவேதம், நாகவேதம், நிஷாத வேதம் ஆகியவற்றையும்  ஒருங்கிணைத்ததாக  வேதமுடிபு இருக்கும்நாம் புவியில் காண்பது எல்லாம் வானில் ஒளியால் ஆனதுஅந்த வானின் ஒளி முதலில் கைலை மலைமுடியில் ஒளிர்கிறது. வேதமுடிபு வேதங்களின் பகுதி என்றாலும்  மாறா மெய்மையின் முழுமை முதலில் ஒளிர்வது வேதமுடிபில்மற்ற வேத மெய்மைகளை எல்லாம் மதிப்பிட்டு  தொகுத்து அதன் மையமாக இருப்பது வேதமுடிபு ஆகும்அதைப்போன்றே மானிடர்களின் அனைத்து அறிவுப்பிரிவுகளையும்  வேத முடிபின் வழிகாட்டுதலின்படி அறிந்து அளந்து முகந்து  ஒருங்கிணைத்துக்கொள்ளமுடியும்.   ஆகவே வேத முடிபு நால் வேதங்களைப் பயில்வோர்க்கு மட்டும் ஆனது என கருத முடியாதுஅது மொத்த உலக மானுட சமூகத்தையும் தன்னுள் கொள்வது.   வேத முடிபு ஒரு நால் முழு உலகையும் தன்னுள அடக்கி ஓங்கி எழும்
·     வேதமுரபு இப்படி அனைத்து அறிவுகளையும் ஒருங்கிணைப்பது என்பது மற்ற மானுட தத்துவங்களை வெல்வது என்று பொருளாகாதுஅவற்றை உசாவி தன்னுள் ஏற்றுக்கொள்ளுதலென்பதாகும்அது அறிவுத்துறைகளை ஆள்வதாக இருக்காது. அறிவுத் துறைகளையும் தனதென கொண்டு நிற்கும். நன்று தீது என்ற எல்லகளைக் கடந்ததுஅனைத்தையும் தான் எனக்கொள்வதுஅதை யோகம் என்று சொல்கிறார்கள். அந்த யோகத்தைக்கைக்கொண்டு உலகு தன்னை பிரிவுகளற்று நான் என ஒற்றுமையாக உணரும் நாள் வரும்  அப்போதே  வேதமுடிபு முழுதாக  வெற்றியடைந்தது என ஆகும்.  
·      அதன் தொடக்கமாக அமைவது தத்துவங்களுக்கு இடையிலான அல்லது அறிவுத்துறைகளுக்கு இடையிலான மோதல் என்பதல்ல. அவை ஒன்றை ஒன்று உசாவி அறிந்து பெற்றும் கொடுத்தும் மாற்றியும் தழுவிக்கொள்வது.  
·     இந்த யோகத்தை தடுத்து நிறுத்த முடியாது. அப்படி தடுத்து நிறுத்தப்படுபவர்கள் இடையூறென ஆகி ஒதுக்கப்படுவார்கள் அல்லது அழிக்கப்படுவார்கள்
கௌதம சிரகாரி:  வேத முடிபு    நால்  வேதங்களின் முதன்மையை ஏற்றுக்கொள்கிறதா?  
கிருஷ்ணர்: நால் வேதங்கள் ஒரு குடியினர் பயில்பவை, ஒரு எல்லைக்குட்பட்ட நிலத்தில் அறியப்படுவதாக உள்ளவைஅது ஒரு மொழியில் கூறப்பட்டவை. இதுபோன்ற எல்லைகளுக்கு உட்பட்டது அனைவருக்கும் முதன்மையானது என்று எப்படிக்கூறமுடியும்ஆகையால் வேதமுடிபை வேதம் என்று கூறுகையில அதே எல்லைகளுக்கு உட்பட்டதாக ஆகிவிடும். ஆனால் வேத முடிபு, சித்தத்திலிருந்து முடிவின்மை நோக்கி எழும் நுண்மை.    வேதமுடிபு இந்த எல்லகளுக்குள் அடங்க முடியாதது.

கௌதம சிரகாரி அப்படியென்றால், மானுட குலத்தில் நால் வேதங்களின் முதன்மையை நீங்கள் மறுக்கிறீர்களா?  
கிருஷ்ணர் 

·    உலகம் என்பது பாரத கண்டத்தோடு முடிவதில்லை. அதைத்தாண்டி பல்வேறு நாடுகளில் பல்வேறு மனித குலங்கள் இருக்கின்றன. அங்கும் மக்கள் நலத்தோடும் வளத்தோடும் வாழ்கிறார்கள் என்பதால்  அங்கும் அவர்களுக்கான வேதம் விளைந்திருக்கிறது என்பது  நிரூபணமாகிறது. அவை இந்த நால்வேதத்தை அறியாதவை. அப்படி இருக்கையில் நால் வேதங்கள் அனைத்து மானுடர்களுக்கும் முதன்மையானது என்று சொல்ல முடியாது
·     நால் வேதங்கள் கூறும்  மெய்மையைப்போன்று அவைகளும் மெய்மையைக் கொண்டிருக்கும்இப்படி அனைத்து மெய்மையை உள்ளடக்கிக்கொண்டு ஒன்றென திரள்வதே வேத முடிபு.   அப்படி ஒன்று திரண்டு முழுமை கொண்ட மெய்மை ஒன்றே என ஆகும்அந்த ஒன்றையே நாம் இங்கு வேதங்களின் மூலம் காண முயல்வதுஅந்த ஒன்றில் எதை யார் அறிய முயல்கிறார்களோ அதை மட்டுமே அவர்கள் அறிகிறார்கள். ஆனால்  மானுடர்கள்  பல்வேறாக பிரித்து  அறிய விழைந்து செல்லும் பாதை அந்த ஒன்றை நோக்கி மட்டுமே.
·      அப்படி அந்த முழுமை  மெய்மையை  தானென அறியும்  நானே இறை ஆகி நிற்கிறேன்.  காலந்தோறும் நான் பிறந்தெழுவேன். களந்தோறும் முகம் கொள்வேன். நிலந்தோறும் சொல்சூடுவேன். இங்குள மெய்மையெல்லாம் ஒன்றே என்றும் ஒன்றென்றானதே நான் என்றும் எங்கும் நின்றுரைப்பேன். அறுபடா மாலையின் முடிவிலா மணிகள் என காலந்தோறும் நான் எழுந்துகொண்டே இருப்பேன். வாளேந்துவேன். சொல்சூழ்வேன். ஊழ்கத்திலமர்வேன். ஒருபோதும் ஒழியமாட்டேன். உலகெங்கும் என் சொல் நிலைகொள்ளும். இக்கணம் அதை சான்றுரைக்கட்டும். ஆம், அவ்வாறே ஆகுக!”
 கௌதம சிரகாரி: என் ஆசிரியமரபு வகுத்தமைத்த  நெறியை மீறி  நடப்பதற்கு உரிமை எனக்கில்லைஉலகை ஆக்கிய பிரம்மன் வேதங்களை வேள்விகளைப் படைத்து இதைக்கொண்டு பெருகி வளருங்கள் என கூறியிருக்கிறார். அவை நாம் விரும்பியதை அனைத்தையும் தரவல்லது என்றும் கூறப்பட்டுள்ளதுவேள்விகள் பிரம்மத்திலிருந்து பிறந்தவை. பிரம்மம் அழியாதது . ஆகவே வேதம் கட்டமைத்துள்ள வேள்விகள் உலக முழுமைக்குமானவை என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?  
கிருஷ்ணர் வேள்வி எது என்பதைக்  கூறுவதாக ஏன் வேதம் மட்டுமே இருக்கவேண்டும்எது வேள்வி இல்லை என்று அணுகுவதைவிட எது வேள்வியாகுமென ஆய்வது சிறப்பானதுமக்கள் திரளென சேர்ந்து மெய்மையை அடைவேண்டும் என்றால், ஏன் மக்கள் திரள் என்பதை பாரத கண்டத்தோடு மட்டும் ஏன் குறுக்கிக்கொள்ளவேண்டும்ஒவ்வொரு குலத்திலும் வேள்விகள் இருகின்றனஅவை இருக்கும் சூழல்களுக்கேற்ப மாறுபடுகின்றனமெய்யறிதல் ஒன்றென ஆகும் என்றால் வேள்விகள் திரண்டு ஏன் பொதுமைகொள்ளக்கூடாதுநால் வேதங்களை அடிப்படையாகக்கொண்டு கொண்டு எது வேள்வியல்ல  என ஆய்வதைவிட எது வேள்வியாக அமையும் என்பதை வேதமுடிபின் வழி அறிய வேண்டும்.    
கௌதம சிரகாரி:  வேள்விகள் சடங்குகள் என்பது மாறாதது .
கிருஷ்ணர் 
·    சடங்குகள் மெய்மையை நோக்கி மானுடரைக் கொண்டு செல்பவை. மெய்மை ஒன்றென  இருக்கலாம். ஆனால அதை அடைய முயலும் சடங்குகள் ஒன்றென மாறாதவையாக இருக்கவேண்டுமென்பதில்லை
·    செயல் துறந்து நிற்கும் மெய்மையை அடைவதற்கான செயல்களே வேள்விகள். செயலற்ற மெய்மையின் காரணமாகவே செயல்கள் விளைகின்றன. ஆகவே தான் செயல்களை(வேள்விகளை)விட ஞான சிறந்தது. ஞானத்தை அடையவேண்டியதின் பொருட்டே அனைத்து வேள்விகளும் இயற்றப்படுகின்றன
·    வேள்விகள் காலங்களுக்கெற்ப மாறும், புதுவடிவு கொள்ளும். அப்படி நிகழவிடாமல் தடுக்கும் உங்கள் உறுதி தகர்க்கப்படும்.  
·    எதிர்காலத்தை எதிர்கொள்ள நாம் தயங்கக்கூடாதுஅப்படியில்லாமல் எதிர்காலத்திற்கான மாற்றங்களை தடுக்க முற்படுபவர்களை தகர்த்து அழித்து அம்மாற்றங்கள் நிகழ்த்தப்படும். இத்தகைய அழிவு நேராமலேயே நாம் எதிர் காலத்தை எதிர்கொள்வது நல்லது
·    ஒருவர் இப்படி தன் பாதையை மாற்றிக்கொள்வது அச்சத்தினால், அல்லது அறிவு மயக்கத்தினால் அல்ல அது இலக்கை நோக்கிய பயணத்திற்கானதுதான் என்பதை அறியவேண்டும். அதற்காக தன் கல்வி, ஞானம் நுண்ணுணர்வின் துணை கொண்டு தேவையான மாற்றத்தை அறிந்துகொண்டு அதை மற்றவருக்கும் அறிவுறுத்த வேண்டும்
·    இப்படி ஒரு மாற்றத்துக்கு ஒப்புக்கொள்ளாதவர்கள்  அழிவுக்கான பாதையில் செல்கிறார்கள். காலம் அவர்களை அழித்து முன் செல்வதற்கு இரக்கமற்று காத்திருக்கிறதுஅந்தப் பேரழிவை  நான் காண்கிறேன். ஒரு அன்னையென உங்கள் மீது பரிவுகொண்டு இரங்கிக்கோருகிறேன்காலாவதியாகவேண்டிய  வேள்விகள், சடங்குகளை மாற்றக்கூடாதவை என்று பற்றிக்கொண்டிருப்பதை கைவிட்டு  காலத்திற்கேற்ப வழிகளை நெறிகளை மாற்றிக்கொள்வது ஒன்றே உங்களை காப்பதாக மாறும்.  
 கௌதம சிரகாரி   வேதங்கள், அது சொல்லும் வேள்விகள் விண்ணிலிருந்து எமக்கு அளிக்கப்பட்டது. இதற்கு அடிபணிதல் ஒன்றே எங்கள் கடமை. இதற்கு மாறாக சிந்திக்கவும் உரிமைகள் அற்றவர்கள் நாங்கள்இந்த மாற்றங்கள்  என்பது எங்களால் இயல்வதல்ல.  

 
சொல்லவை கௌதம சிரகாரியின் சொற்படி நிற்பது என்று முடிவு எடுக்கிறது

தண்டபாணி துரைவேல்