ஜெயமோகன்,
நான் அளவைவாதம் என்ற சொல்லை இணையத்தில் தேடினேன். பிரமாணவாதம் என்று பொருள் வந்தது. அது பூர்வமீமாம்சம் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் கீழே நீங்களே எழுதிய இந்தக் கட்டுரை வந்தது
வேதாந்த மரபும் தமிழ் இலக்கியப்போக்குகளும்
இக்கட்டுரையில் அளவைவாதம் பற்றி விரிவாகவே பேசியிருக்கிறீர்கள்.
வேதவியாசனும் கிருதகோடியும்
ஏதமில் சைமினி எனுமிவாசிரியர்
பத்தும் எட்டும் ஆறும் பண்புறத்
தத்தம் வகையால் தாம் பகர்ந்திட்டனர் [மணிமேகலை]
என்று அளவை வாதி தன் தரப்பை அதில் குறிப்பிடுவதை சுட்டிக்காட்டுகிறீர்கள். வெண்முரசின் இப்போடதைய அத்தியாயங்களைப் பயில உதவும் பகுதி அது
சண்முகம்