Friday, March 23, 2018

துருவன்




ஜெ

வெண்முரசு நாவல்களை தொடர்ந்து வாசித்துக்கொண்டே வந்தேன். நான் நூலாக வாசிப்பவன். தொடராக வாசித்திருந்தேன். ஆனால் என்னால் தொடர்ச்சியாக நாட்கணக்கில் மூழ்கியமர்ந்து வாசித்தால்தான் உண்மையில் வெண்முரசுக்குள் செல்லமுடிகிறது. வெண்முரசு உருவாக்கிய ஆழ்ந்த மனநிலையை எனக்கு வேறுநாவல்கள் அளித்ததில்லை. உங்கள் படைப்புகளில்கூட அதை நான் உணர்ந்ததில்லை. ஏனென்றால் இது மிகவிரிவான களம். ஒன்றைமட்டும் ஃபோகஸ் செய்யவில்லை. எல்லாமே முக்கியம்தான் என்பதே இதன் இடம்.

என் வாசிப்பில் சமீபத்தில் ஆழமான அதிர்வை உருவாக்கியது பிரயாகையில் துருவனின் மனநிலையைப்பற்றிய இடம். நிலைபேறு என்ற விஷயத்தை இனி துருவனை நினைக்காமல் யோசிக்கவே முடியாது என நினைக்கிறேன். துருவனை நோக்கி திருமணம் செய்வது என்பதன் பொருள் புரிகிறது. எவ்வளவுபெரிய குறியீடு என்று மனம் பிரமித்தது

அதேபோல பாஞ்சாலிக்கும் துர்வனுக்குமான ஒற்றுமையையும் அந்தக்கோணத்தில்தான் புரிந்துகொண்டேன்

செல்வி