அன்புள்ள ஜெ
இமைக்கணத்தின் யமலோக வர்ணனைகள் காண்டீபத்தில் அர்ஜுனன் செல்லும் யமலோகத்தின் வேறொரு வடிவம். மினியேச்சர் சுருக்கம் என்று சொல்லலாம். புராணங்களை ஒட்டியே இருந்தாலும் அதன் உள்ளே எழும் வர்ணனைகள் படிமங்கள் ஆவதும் அதில் எழும் வாழ்க்கைநுட்பங்களும் அழகானவை
சித்திரபுத்திரனின் குறிப்பைப்பார்த்ததும் செய்த பாவங்களின் பட்டியலைக்கண்டு அது நான் இல்லை என்றுதான் அலறுகிறார்கள். பின்னர் இழுத்துச்செல்லம்போது மனம் தளர்ந்து அமர்ந்து ஆம் அது நானே என்று விம்முகிறார்கள்
சங்கர்