ஜெ,
கடுவெளி மழையெனக் கனிந்து மண்மேல் இறங்குவதுபோல பிரம்மம் சொல்லென்றாகியது
வேதமெனும் அனலின் அனல்மை என்பது பிரம்மமே
ஆற்றில் மாசுசேர்க்கலாகாது. ஆனால் வயலில் மாசு உரமென்றாகும். –லௌகீகத்துக்கு வேதம்
ஓதலாமா
எக்கல்லும் தெய்வச்சிலையே. எனினும் கல் ஒன்றைச் செதுக்கி கருவறையில் பீடத்தில் அமர்த்துகிறோம் –எல்லா சொல்லும் வேதம் என்றால்
ஏன் தனியாக வேதம்?
புரவியை நாம் பழக்குகிறோம், புரவி நம்மை இட்டுச்செல்கிறது. – வேதம் பயில்வது ஏன்?
மலரும் கனியும் சூடுதலே வேர்முதல் இலைவரை செடியின் இலக்கு. பிரம்மத்தை வேட்பதனால்தான் அதர்வம் வேதமாகிறது
புகையென மணமென. உண்ட அனைத்தும் முற்றிலும் அனலென்றான தழலே ரிக்
கௌதம சிரகாரி சொல்லும் இந்த
உவமைகளைத் தொகுத்துக்கொண்டு அவர் சொல்ல வருவது என்ன என்று புரிந்துகொள்ள முயன்றேன்.
தனித்தனியான வரிகளாக இருந்தாலும் ஒரே நீண்ட கவிதையாக இவற்றை ஆக்கிக்கொள்ளமுடியும் என
தோன்றியது
லட்சுமணன்