Friday, March 23, 2018

மகாபாரத நாவல்கள்




அன்புள்ள ஆசிரியர்க்கு

நான்  அக்னிநதி  வாசிக்குபொழுது உங்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன்,இப்பொழுது "hermen hesse" வின் சித்தார்தன் வாசிக்கும்பொழுது  மீண்டும் எழுதிகிறேன் ,நான் முதலில் வாசித்த நவீன நாவல் "விஷ்னுபுரம்", அதன் அலைகளில் அடித்து செல்லபட்டு பத்து நாட்கள் செய்வது அறியாது அலைந்திருக்கிறேன்.சில மாதங்கள் கழித்து "பின் தொடரும் நிழல்"நாவல் உட்பட,உங்கள் அனைத்து நாவல்களையும் வாசித்து முடித்தேன் , சிறுகதைகயும் தான்,பெரும் பொறாமை ஏற்ப்பட்டது, உங்கள் எழுத்தின் படைப்பூக்கத்தின் மேல்

வெண்முரசு" எழுத ஆரம்பித்த பிறகு தான் தீவிர இலக்கியம் எனக்கு அறிமுகமாகியது,"மழைப்பாடல்" எழுதிக்கொண்டிருக்கும் பொழுது என்று நினைக்கிறேன் நிச்சியமான நினைவில்லை,உங்கள் பேட்டி ஒன்று குமுகத்தில் வெளிவந்து இருந்தது,எதேச்சையாக தான் வாசித்தேன் எனக்கு நாழிதள் வாசிக்கும் பழக்கம் இல்லை,ஊழ் என்று தான் கருதுகிறேன்,ஆஸ்திகனுக்கு மானசாதேவி கதைச்சொல்லும் ஒவியம் இருந்தது,உடனே உங்கள் தளத்திற்கு சென்று "முதற்கனல்" முழுக்க வசித்தேன் 


இரண்டு நாட்களில் என்று நினைவு,அப்பொழுது சரித்திர நாவல்கள் மட்டும் தான் வாசிப்பேன்,உங்களுடய  பட்டியலை தேடினேன்,எங்கேயோ "விஷ்ணுபுரம்"சரித்திர நாவல் என்று பொட்டிருந்தது.பின்பு உங்கள் வழியாக அனைத்து முனோடிகள் படைப்பையும் வாசித்தேன்.எனக்கு என் வாசிப்பில் திருப்தி ஏற்ப்படவில்லை இப்பொழுதுவரைக்கும்,ஒரு புத்தகத்தை வாசித்ததும் அதன் அனைத்து  வாசல்களையும் திறந்து விட்டதாக தோன்றவில்லை,அனைத்துடனும் விஷ்ணுபுரம் உடன் வருகிறது.சில தினங்கள் முன்பு "சித்தார்தன்"வாசித்தேன் முதலில் வாசிப்புக்குள் நுழைவதற்கு பெரும்
முயற்சி தேவைப்பட்டது,பின்பு பிங்கலனுடனும் கெளத்தம நிலாம்பரனுடனும் இணைத்து வாசிக்கயில் அதன் அழத்தை நிரப்பிக்கொள்ள முடிந்தது.

மூவரும் ஒரே வரிசையில் நிர்க்க கூடியவர்கள்,உன்மையில் அவர்கள் சம்ஸாரத்தை கைவிடவில்லை,அவர்களை சம்சாரம் கைவிட்டுவிட்டது,பிங்லனுக்கு சாருவும்,சித்தார்தனுக்கு கமலாவின் மரணமும் மைந்தனின் பிரிவும், இச்சா மோக்ஷத்தை வழங்கி ஞானதிர்க்கு வழிவழுங்கியது எதேச்சையான நிகழ்வாக தோன்றவில்லை.நாம்  இச்சையை விடுதவதை விட,அது நம்மளை கைவிடுவது ஞான மார்கத்திற்கு சுலபம் போல.

அக்னிநதிக்கு பின்பு காண்டேகரின் யயாதி,எஸ்.எல்.பைரவா வின் "பர்வம்" ரண்டாமூழம்" இனி நான்  உறங்கட்டுமா, எஸ்.ராமகிருஷ்ணனின்  உபபாண்டவம்,உட்பட எந்த மகாபாரத நாவலையும் வாசிக்க முடியவில்லை, நான் கண்ட வெண்முரசில் கண்ட பீமன் அல்ல நான் வாசிப்பது திரெளபதியாக இருக்கட்டும் சுத்தமாக உள்நுழைய முடியவில்லை,வெண்முரசின் மொழி,அதை தவிர எந்த மகாபாரத நாவல்களை வாசிக்க
விடவில்லை,முற்றாகா தூக்கி வீசிவிட்டது,என்னால் உனரமுடிகிறது  அனைத்தும் ஒரு பகுதியை எடுத்து கொண்டு பேச வந்தவை  முண்ணோடிமுயர்ச்சிகள்,அது அதன் தவரல்ல, ஆனால் முழுமை மீதே பற்று அதிகம் எனக்கு.



அன்புடன்
ராம்