Saturday, June 1, 2019

கனவிலென..



அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

இருட்கனி 50-ஆம் அத்தியாயம்.  கர்ணனை நன்குணர்ந்து அவன் உள்ளிருந்தே ஒலிக்கும் குரல் போலவும் அன்பினாலும் அனுபவத்தில் அறிந்து கொண்டவற்றைக் கொண்டும் ஆழமானவை எனத் தோன்றும் உபதேசங்களை சல்யர் அளிக்க, அத்தியாயத்தின் இறுதியில் மறுபுறம் இளைய யாதவர் அர்ஜுனனிடம் சொல்லாடிக் கொண்டிருந்ததும் காண்டீபத்துடன் நின்ற அர்ஜுனன் அதை விழிகள் கனவிலென கேட்டுக் கொண்டிருந்ததும் காட்டப்பட்டது இதன் எதிரொளிப்பே முன்னது என்பதுபோல் தோன்ற அருவ வெண்முரசின் பெரும் பரப்பும் அறிந்திரா பாதைகளும் கற்பனை செய்ய உவகையளிக்கிறது.


அன்புடன்,
விக்ரம்,
கோவை