Friday, June 7, 2019

விதைகள்



எங்கள் நூல்களின்படி இப்புவியிலுள்ள உயிர்க்குலங்கள் அனைத்துக்கும் விதைகள் நாங்களே. எங்களிடம் நுண்கருத்தென உறையும் விழைவுகளே கால்களும் சிறகுகளும் வால்களும் நாவுகளும் கொம்புகளும் உகிர்களும் நஞ்சும் வஞ்சமுமாக எழுந்து பல்லாயிரம் வடிவங்களில் இங்கு பரவியிருக்கின்றன. எங்களுக்கு முன்பிருப்பது பருவில்லா கருத்துவெளி மட்டுமே. அறிக! மகத்தை ஜகத் என்றாக்குவது நாங்களே”

இன்று இமைக்கணத்தின் தொடக்கத்தில் இந்த வரிகளை வாசித்தேன். இதிலிருந்த கவித்துவம் நிலைகுலையச் செய்துவிட்டது. தனித்தனியாக வெட்டிப்போட்டால் ஒரு மகத்தான கவிதைக்குரிய கரு. அதை புனைவில் ஒரு வரியாகக் கடந்து செல்கிறேன் என்ற பதைப்பு ஏற்பட்டது. ஆகவே இதை எழுதுகிறேன்

எஸ்.பாலகிருஷ்ணன்