Tuesday, June 25, 2019

விளிம்புகள்




அன்புள்ள ஜெ,


வெண்முரசில் சில இடங்களில் சில edges உள்ளன. அதைப்பற்றி நான் நண்பர்களிடம் பேசுவதுண்டு. உதாரணமாக கர்ணனா துரியோதனனா எவர் அறத்தில் நின்றவர்கள்? பாண்டவர்கள் கூச்சமே இல்லாமல் கௌரவர்களைக் கொன்றனர். ஆனால் துரியோதனன் கர்ணன் இருவருமே மைந்தரைக் கொலைசெய்யவில்லை. அபிமன்யூவின் கொலை மட்டும்தான் விதிவிலக்கு. ஆனால் அந்தக்கொலையைக்கூட ஒரு சிறு வேறுபாட்டுடன்தான் வெண்முரசு எழுதிக்காட்டுகிறது.


துரியோதனனுக்கு அபிமன்யூவைக் கொல்வதில் இஷ்டமில்லை.

துரியோதனன் ஒருகணத்தில்நிறுத்துங்கள்! போதும் இப்போர்!” என்று கூவினான். “மூத்தவரே…” என்று துச்சாதனன் கூவினான். துரியோதனன் கைகளை வீசிபோதும்அவனை போகவிடுங்கள்வேண்டாம்!” என ஆணையிட்டான் பிறர் கொல்லச்செல்லும்போது துரியோதனன் தடுக்கிறான். அபிமன்யூ ஆயுதம் கொடுங்கள் என்று கெஞ்சும்போது அவன் அபிமன்யூவுக்காக இரக்கம் காட்டமுற்படுகிறான். துரியோதனன் மறுமொழி சொல்வதற்குள் துரோணர் தன் அம்பால் அவன் நெஞ்சை அறைந்தார். குருதி வழிய அவன் தெறித்து மண்ணில் விழுந்து உருண்டு எழுந்து நின்றான். “சொற்களை கேளாதீர்கள். அவனை கொல்லுங்கள்!” என்று துரோணர் கூவினார். “அவன் வில்லில் எழுந்தது தொல்லசுரர்களின் ஆற்றலென்பதை மறக்கவேண்டியதில்லை. கொல்லுங்கள் அவனைஎன்றார். 

அவன் தயங்குகிறான். ஆனால் துரோணர் தயங்கவில்லை.

அதேசமயம் அந்த உச்சத்தில் கர்ணன் தயங்கவில்லை. அவன் தயங்கினாலும் உச்சத்தில் அவனுக்கு ஒரு மனநாடகம் தேவையாகிறது. அதன்வழியாக அவன் கடந்துசெல்கிறான். அவன் ஒருகணத்தில் அபிமன்யூவை அர்ஜுனனாகக் கண்டு அவன் மீதான சீற்றத்தை இவன் மேல் காட்டி தாக்கிவிடுகிறான். கர்ணனின் கையிலிருந்து விஜயம் தயங்கியது. அத்தருணம் தேர் திரும்ப உரக்க நகைத்தபடி ஒருகணம் அவனை நோக்கிய அபிமன்யுவில் இளைய அர்ஜுனன் தோன்றி மறைந்தான். சீற்றம்கொண்டு தன் நாணை இழுத்து அம்புகளால் அபிமன்யுவை அறைந்தான். மேலும் மேலுமென அறைந்து அபிமன்யுவின் தோள்கவசங்களை உடைத்தெறிந்தான்.

edgeல் கர்ணனைவிடவும் துரியோதனனே எஞ்சிநிற்கிறான்

சாரங்கன்