Saturday, June 22, 2019

வெண்முரசு நூல்கள்



வணக்கம்,

நலமென்று வெண்முரசின் அடுத்த பகுதி அறிவிப்பு தெரிவிக்கின்றது.

வெண்முரசு - குருதிச்சாரலுக்கு அடுத்த நூல் எதுவும் அச்சுப்பதிப்பில் வரவில்லை. எப்போது அடுத்த பதிப்புகள் வர ஆரம்பிக்கும். தினுமும் படித்தாலும், அச்சுப்புத்தகமாக படிக்கும் போதுதான் படித்த திருப்தி கிடைக்கின்றது. 

அன்புடன்

ரெங்கசுப்ரமணி 

அன்புள்ள ரெங்கசுப்ரமணி

வெண்முரசு அச்சுநூலில் அடுத்து வரவேண்டியது இமைக்கணம். அதைக் கொஞ்சம் சீர்நோக்கலாமென்று நான் தள்ளிப்போட்டேன். என் பயணங்கள் அடுத்தடுத்த போர்ச்சித்தரிப்புகள் என தள்ளிப்போயிற்று. பிழைநோக்கிக் கொண்டிருக்கிறார்கள். சிலநாட்களில் அறிவிப்பு வரும். அடுத்தடுத்த நூல்கள் உடனே வெளிவரும்

ஜெ